பாஜக முன்னால் தலைவர் அண்ணாமலை ராஜினாமா கடிதத்தை நேரில் ஒப்படைத்தார்.
பாஜக முன்னால் தலைவர் அண்ணாமலை பாஜக தேசிய தலைவர் நிதின் நவீனை சந்தித்து தனது ஐந்து பக்க ராஜினாமா கடிதத்தை நேரில் ஒப்படைத்தார். கடிதத்தை அளித்த பிறகு அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமீத் சாவை சந்தித்து தான் கட்சியை விட்டு விலகுவதற்கான காரணங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளதாகவும் அண்ணாமலையின் முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு பாஜக தேசிய தலைமை கேட்டுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது . இதுகுறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டபோது இன்னும் ரெண்டு நாட்களில் எல்லாவற்றைப் பற்றியும் விரிவாக பேசுகிறேன் என்று தொிவித்தார். தனது பிறந்த நாளான ஜூன் 4-ம் தேதி அன்று புதிய அரசியல் இயக்கம் அல்லது தனி கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
Tags :



















