ரஷ்யாவுக்கு உதவினால் சீனாவின் பொருளாதார தடைகளை சந்திக்கும் எச்சரிக்கும் அமெரிக்கா

by Admin / 14-03-2022 01:43:37pm
ரஷ்யாவுக்கு உதவினால் சீனாவின் பொருளாதார தடைகளை சந்திக்கும் எச்சரிக்கும் அமெரிக்கா

ரஷ்யாவுக்கு உதவினால் சீனாவின் பொருளாதார தடை உள்ளிட்ட கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரேன் மீதான போர் காரணமாக ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன இந்த நிலையில் இத்தாலி தலைநகர் ரோமில் வைத்து சீனாவின் உயர்மட்ட தூதரக அதிகாரி யாங்  ஜிசசியை  சந்தித்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

பொருளாதாரத் தடைகளில் இருந்து மீள்வதற்கு ரஷ்யாவுக்கு சீனா உதவி செய்தால் உலக நாடுகளில் இருந்து தனித்து விடப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

சீனாவிடம் ஆயுதங்கள் வழங்குமாறும் ரஷ்யா கேட்டுக் கொண்டிருந்த நிலையில் இந்த விவகாரத்தில் சீனா ரஷ்யா பக்கம் இருப்பது பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தடைகளைச் சந்திக்க  வழிவகுக்கும் என அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் சீனாவுக்கு தெளிவுபடுத்தி உள்ளனர்

 

Tags :

Share via

More stories

Logo