தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி

by Staff / 18-01-2023 10:58:01am
தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி

சமீப காலமாக தமிழ்நாடு குறித்த சர்ச்சை பல்வேறு வகையில் மீண்டும் எழுந்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என கூறியதற்கு பல்வேறு அமைப்புகள், தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்தனர். இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ கருணாநிதி, கர்நாடகாவிற்கு தனி மாநில கொடி இருக்கும்போது, தமிழ்நாட்டிற்கென ஏன் தனிக்கொடி இருக்கக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார். 1970ல் தலைவர் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்த தனிக்கொடி கோரிக்கையை மீண்டும் எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி தேவை. அது நம் உரிமை என கோரியுள்ளார்.

 

Tags :

Share via