ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து கனிமொழி கருணாநிதி எம்பி

by Staff / 03-04-2023 04:13:06pm
ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து கனிமொழி கருணாநிதி எம்பி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் சீர்மிகு திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூட்டரங்கில் கனிமொழி எம். பி தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், ஆணையர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் அதிகாரிகளுடன் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பேருந்து நிலையம் வணிக வளாகம் பணிகளை நல்ல முறையில் விரைவாக முடிக்க வேண்டும்.  முடிவு பெறாத சாலை கால்வாய் உள்ளிட்ட பல பணிகளையும் முடிக்க வேண்டும். மாநகரில் பெருகி வரும் வாகன பெருக்கம் ஜனத்தொகை நெருக்கடி உள்ளிட்ட பலவற்றை விவாதித்தபோது நெருக்கடியான சூழ்நிலைகளில் லாரிகள் பகல் நேரங்களில் அனுமதிக்க படுவதால் ஏற்படும் நெருக்கடி குறித்தும் சில சாலைகளை மாற்று வழி மூலம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கான்பது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பணிகளை முறையாக விரைவாகவும் முடிப்பது என்று விவாதிக்கப்பட்டது.பின்னர் கனிமொழி எம். பி அளித்த பேட்டியில் "ஆயிரம் கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெறுகின்ற பணியில் மத்திய அரசு பங்களிப்பு பாதியும் மாநில அரசு பங்களிப்பு பாதியும் இந்த திட்டத்தில் அமைந்துள்ளது. ஏறக்குறைய 952 கோடி திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளன. அதில் பல பணிகள் முடிவு பெற்றுள்ளது. குறிப்பாக விவிடி சாலை உள்ளிட்ட சில சாலை பணிகள் நடைபெற்றுள்ளது. முடிவு பெறாத பணிகளை இந்த அரசு பொறுப்பேற்ற பின் இரண்டு வருடகாலமாக அதை விரைவு படுத்தி பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்து பணிகளும் முழுமையாக முடிவு பெற்று ஜூன் மாதத்திற்குள் முடிவு பெற்று அனைத்தும் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், சப் கலெக்டர் கௌரவ்குமார், மருத்துவ கல்லூரி டீன் சிவக்குமார், குடிநீர் வடிகால் வாரிய பாதாள சாக்கடை திட்ட நிர்வாக பொறியாளர் லதா செயின் நலிஸ், உதவி நிர்வாக பொறியாளர் கருப்பன்னசாமி, குடிநீர் வழங்கல் துறை மேற்பார்வை செயற்பொறியாளர் செந்தூர்பாண்டி, மாநகராட்சி பொறியாளர் பாஸ்கர், உதவி ஆணையர் சேகர், உதவி செயற்பொறியாளர் சரவணன், இந்திய வர்த்தக சபை சங்கத்தை சேர்ந்த கோடீஸ்வரன், அகில இந்திய வர்த்தக சபை சங்கத்தை சேர்ந்த ஜோ பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

 

Tags :

Share via