முககவசம் அணிவது தனிமனித இடைவெளியை பின்பற்றுவது அவசியம் -டாக்டர் ராதாகிருஷ்ணன்

by Editor / 16-04-2022 09:05:06pm
 முககவசம் அணிவது தனிமனித இடைவெளியை பின்பற்றுவது அவசியம் -டாக்டர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து விட்டது. தினசரி பாதிப்பு 22 ஆக சரிந்துள்ளது. சென்னை உள்பட 8 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.

ஆனால் டெல்லி உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறிப்பிடும் அளவிற்கு இல்லை என்றாலும் கூடுதல் கவனம் செலுத்த அரசு முடிவு.பொது இடங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பொது போக்குவரத்து, தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அரசு கூறவில்லை. 

தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை பின் பற்றுவதும் அவசியமாகும்.

தமிழகத்தில் எக்ஸ்இ தொற்று பாதிப்பு இல்லை என்றாலும் மார்ச் மாதத்தில் ஒமைக்ரான் உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டது. 93 சதவீத மக்களுக்கு ஒமைக்ரான் உள்வகை (பி.ஏ.2) தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மக்கள் அலட்சி யமாக இருக்கக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via