இனி உச்சநீதிமன்றத்தில் இலவச வைஃபை சேவை
42 நாட்கள் கோடை விடுமுறை விடுமுறைக்கு பின் இன்று உச்ச நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் வன்முறை, மகாராஷ்டிரா சிவ சேனா எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்குகள் விசாரணைக்கு வர உள்ளன. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் இலவச வைஃபை சேவை தொடங்கப்பட உள்ளதாக தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார். தலைமை நீதிபதி அமர்வு, 2,3,5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உணவகம் ஆகிய இடங்களில் இலவச வைபை சேவை கிடைக்கும் என்றும், இந்த சேவையை வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள், மனுதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Tags :