அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை

by Staff / 02-03-2023 03:18:20pm
அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சப்ப அருகே உள்ள சாத்தம்பாடியை சேர்ந்த ரவி( 36). கூலித் தொழிலாளியான இவருக்கு கடந்த சில மாதங்களாக அடிக்கடிப் வாய்ப்புண் ஏற்பட்டது. இது தொடர்பாக ரவி பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் பயனில்லை. இந்நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று. அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர் இதில் ரவிக்கு நாக்கில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ரவி மனம் உடைந்தார். டாக்டர்கள் ரவியை மேல் சிகிச்சைக்காக மதுரை பாலரங்காபுரத்தில் உள்ள அரசு புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். அங்கு உள் நோயாளியாக சேர்க்கப்பட்ட ரவி கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். ஆனால் அவருக்கு வலி அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த ரவி, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து இன்று அதிகாலை மருத்துவமனையில் உள்ள கழிவறைக்கு சென்ற ரவி, நீண்ட நேரம் ஆகியும் வார்டுக்கு திரும்பவில்லை.இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் கழிவறைக்கு சென்று பார்த்த போது கழிவறையில் தூக்கில் பிணமாக தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தெப்பக்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via
Logo