நடிகை மீரா மிதுனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், அவரை கைது செய்து ஆக.11 ஆம் தேதி ஆஜர்படுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “பிடிவாரண்ட் பிறப்பித்து 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மீரா மிதுன் டெல்லியில் இருப்பதாகவும், அவரை மீட்கக் கோரியும் அவரது தாய் மனு அளித்தார். அதன் பேரில், டெல்லி போலீசாரால் மீரா மிதுன் பிடிக்கப்பட்டு, அரசு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :