கரோனா பரவலை பூஜ்ஜியமாக்க பணியாற்றுகிறார் முதல்வர்: அமைச்சர் செந்தில் பாலாஜி

by Editor / 27-06-2021 07:36:23pm
கரோனா பரவலை பூஜ்ஜியமாக்க பணியாற்றுகிறார் முதல்வர்: அமைச்சர் செந்தில் பாலாஜி

 கரூர் மாவட்டத்தில், ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கேச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்த பயன்படும் வானங்களை ஞாயிற்றுக்கிழமை மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து, ஏமூரில் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சர் செந்தல்பாலாஜி தொடக்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "தமிழ்நாட்டில் கரோனா பரவலை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்றே நோக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்.

ஏமூரில் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை தொடக்கி வைத்த அமைச்சர் செந்தல்பாலாஜி.

தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பில் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோனாவில் இருந்து தங்களை காத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கரூர் மாவட்டத்தில், 6,079 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒருவருக்குக் கூட விடுபடாமல் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசி செலுத்துவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இதற்காக, ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒரு வாகனம், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via