விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தீவிர வாக்கு சேகரிப்பு

by Staff / 30-06-2024 01:04:26pm
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தீவிர வாக்கு சேகரிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு ஆதரவாக,
உதயசூரியன் சின்னத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில தீர்மான குழு உறுப்பினருமான ஆர்.சேதுநாதன் வாக்கு சேகரித்தார். அப்போது, மயிலம் மத்திய ஒன்றிய செயலாளர் கோ.செழியன், மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் இராஜாராமன் ஆகியோர் செ.கொளப்பாக்கம் பாகம் எண்: 142, கிராமத்தில் வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரித்தனர்.இதில் விக்கிரவாண்டி தொகுதி செ.கொளத்தூர் கிளை செயலாளர்கள், பிரிதிநிதிகள், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via