காரில் நசுங்கி குழந்தை பலி

by Staff / 26-02-2023 01:39:11pm
காரில் நசுங்கி குழந்தை பலி

குஜராத் மாநிலம் சூரத்தில் மனதை உலுக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. சூரத்தின் கணேஷ் பார்க் சொசைட்டி பகுதிக்கு கோபர்பாய் என்ற நபர், தனது உறவினர்கள் வீட்டிற்கு மனைவி மற்றும் பெண் குழந்தை பிரஞ்சலுடன் சென்றுள்ளார். அந்த குழந்தை சாலையில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில், அப்பகுதியில் நுழைந்த கார், குழந்தையின் மீது ஏறி சென்றது. இதில் குழந்தையின் உடல் காரின் சக்கரத்தில் நசுங்கி அங்கேயே உயிரை விட்டது. அந்த காரை ஓட்டி வந்த நபர் குழந்தையின் மாமா என்றும் கூறப்படுகிறது. இந்த காட்சி பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

 

Tags :

Share via

More stories

Logo