தென்காசி,திருநெல்வேலி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது -23 வாகனங்கள் பறிமுதல்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் தொடர்ந்து ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டு வரும் சூழலில் ரேசன் கடையில் தற்காலிமாக பணியாற்றி வருபவர் தனக்கு சொந்தமான வீட்டில் சுமார் 4 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கிவைத்திருந்ததாக கடையநல்லூர் போலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தென்காசி மாவட்டம் குடிமை பொருள் வழங்கல் அதிகாரிகள் சுமார் 4 -டன் ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.தொடர்ந்து இந்த பகுதியில் ரேசன் அரிசி மூட்டை சட்டத்திற்கு புறம்பாக கடத்தி பதுக்கி வைத்திருந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி முதல் தென்காசி வரையிலான சாலையில் புதூர் பஸ் ஸ்டாப் முன்பு உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் கலா,உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் குழுவினர் அதிரடி வாகன சோதனை நடத்தினர் அப்பொழுது வேகமாக வந்த கேரள பதிவில் கொண்ட மாருதி கார் ஒன்றை மறித்து சோதனை செய்ததில் இந்த மாருதி காரில் 12 மூடை ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காரை ஓட்டி வந்த கருத்த பாண்டி என்பவரை போலீசார் கைது செய்து அவரது காரையும்,ரேஷன் அரிசியையும் பறிமுதல் கைது செய்தனர். அவராய் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இசக்கி பாண்டி என்பவரையும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
சொக்கம்பட்டி பகுதியில் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் கலா,உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் குழுவினர் அதிரடி வாகன சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் சரக்குவாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவர் கைது.சங்கரன்கோவிலைசேர்ந்த மணிமாறன் தப்பி ஓட்டம்.ஆட்டோவும்,8 மூடை ரேஷன் அரிசியும் பறிமுதல்.
Tags :



















