வெந்நீர் உடலில் கொட்டி குழந்தை பலி

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த பரத்குமார் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் வயது ஆண் குழந்தை இருந்தது..பரத்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு குளிப்பதற்காக வெந்நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வீட்டில் வைத்திருந்தார். அப்போது இவரது ஒன்றரை வயது குழந்தை பெற்றோர் கவனிக்காத நேரத்தில் வெந்நீர் ஊற்றி வைத்திருந்த பாத்திரம் அருகே சென்று இழுக்க எதிர்பாராத விதமாக பாத்திரத்தில் இருந்த வெந்நீர் குழந்தையின் மீது கொட்டியது..இதில் காயமடைந்த குழந்தை வலியால் அலறி துடித்தது... குழந்தையை உடனடியாக குழந்தையை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.. அங்கு குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தது.. அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து போன குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வெண்ணீர் உடலில் கொட்டி குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags :