5 மாவட்டங்களில் இன்று விடுமுறை.

.தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 4ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இன்று திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் 190- வது அய்யா வைகுண்டரின் அவதார தினத்தின் காரணமாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் கோவிலில் திருவிழா நடைபெறுவதை ஒட்டி மார்ச் 4ஆம் தேதி அங்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 15 (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .. அரசு அலுவலகங்கள் கருவூலம் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும். நாளை அரசு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் .
.
Tags : 4 மாவட்டங்களில் இன்று விடுமுறை.