சிறுத்தையின் நடமாட்ட காட்சிகள் சிசிடிவியில் பதிவு பொதுமக்கள் அச்சம். 

by Editor / 13-05-2023 10:07:02am
சிறுத்தையின் நடமாட்ட காட்சிகள் சிசிடிவியில் பதிவு பொதுமக்கள் அச்சம். 

தமிழ்நாட்டில் தற்போது வனப்பகுதியில் இருந்து வன விலங்குகள் வெளியேறுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது.அவ்வாறு ஊருக்குள் வரும் விலங்குகளால் பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன. தற்போது கோடை வெயிலின் தாக்கம் வேறு அதிகமாக உள்ளதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வன விலங்குகள் வருவது அதிகரித்துள்ளது.இந்நிலையில் நீலகிரி மாவட்டம் எமரால்டு பகுதியிலுள்ள
சிசிடிவி கேமராவில் இரவு நேரங்களில் உலா வரும் சிறுத்தையின் காட்சிகள் பதிவாகியுள்ளன.இதனால் இப்பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

ஏற்கனவே இங்கு சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில் தற்போது சிறுத்தை ஊருக்குள் வந்துள்ளது மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. சிறுத்தையின் நடமாட்டம் குறித்து வனத்துறையின் சார்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொருட்சேதமோ,உயிர்ச்சேதமோ ஏற்படும் முன் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via