துப்புரவு தொழிலாளி மனைவி அறுவை சிகிச்சைக்கு ரூ.2.30 லட்சம் நிதி  த வெ க  சார்பில் வழங்கப்பட்டது.

by Editor / 23-05-2025 09:08:46am
துப்புரவு தொழிலாளி மனைவி அறுவை சிகிச்சைக்கு ரூ.2.30 லட்சம் நிதி  த வெ க  சார்பில் வழங்கப்பட்டது.

தமிழக வெற்றிக்கழகம்  தலைவர் தளபதி விஜய்  மற்றும்  பொதுச்செயலாளர் .ஆனந்த் அறிவுறுத்தலின்படி தமிழக வெற்றிக்கழக திருநெல்வேலி தெற்கு மாவட்டகழகச்செயலாளர் .ராஜகோபால் ஆலோசனை படி,திருநெல்வேலி தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் .வடிவேல் முருகன்  ஏற்பாட்டில்,திசையன்விளை 3 வது வார்டை சேர்ந்த துப்புரவு தொழிலாளர் இசக்கியப்பன் மனைவி முத்துமாரி  வயிற்று  அறுவை சிகிச்சை செய்வதற்கு நிதி உதவி ரூபாய் இரண்டு லட்சத்து 30 ஆயிரம் வழங்கப்பட்டது. திருநெல்வேலி தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வடிவேல் முருகன் மற்றும் திசையன்விளை பேரூர் கழகம் செயலாளர் கில்லி ராஜா  ஆகியோர் குடும்பத்திற்கு வழங்கினர்.

 

Tags : துப்புரவு தொழிலாளி மனைவி அறுவை சிகிச்சைக்கு ரூ.2.30 லட்சம் நிதி  த வெ க  சார்பில் வழங்கப்பட்டது.

Share via