சென்னையில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

by Staff / 08-02-2024 01:51:39pm
சென்னையில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா நகர், ஜே.ஜே நகர், பாரிமுனை பகுதிகளில் உள்ள 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் புரளி என போலீசார் தெரிவித்த நிலையில், பள்ளிகளில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். உடனடியாக பெற்றோரை வரவழைத்து குழந்தைகளை அனுப்பி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via