உலக இதய தினம்-இதயத்தை நாம் ஆரோக்கியமாக வைத்திருந்தால் மட்டுமே நம்முடைய ஆயுளை நீண்ட காலம் எடுத்துச் செல்ல முடியும்.

by Admin / 29-09-2026 12:32:50pm
உலக இதய தினம்-இதயத்தை நாம் ஆரோக்கியமாக வைத்திருந்தால் மட்டுமே நம்முடைய ஆயுளை நீண்ட காலம் எடுத்துச் செல்ல முடியும்.

நம் உடலின் இயக்கத்திற்கு மிக முக்கிய உறுப்பாக இருப்பது இதயமாகும். இதயத்தை நாம் ஆரோக்கியமாக வைத்திருந்தால் மட்டுமே நம்முடைய ஆயுளை நீண்ட காலம் எடுத்துச் செல்ல முடியும். நாம் உண்ணும் உணவிலும் மேற்கொள்ளும் செயல்களிலும் தான் அதனை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் உள்ளன. அதன் அடிப்படையில் நாம் அன்றாடம் உண்ணும் உணவில் உப்பின் அளவை குறைப்பதன் மூலமாக இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். கொழுப்பு நிறைந்த அல்லது வறுத்த உணவுகளை தவிர்த்து நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள், பழங்க,ள் முழு தானியங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடலின் இயக்கம் சீராக இருப்பதற்கு குறைந்தது ஒரு 30 நிமிடமாவது நடைப்பயிற்சியும் நீச்சல் பயிற்சி ஓட்ட பயிற்சிஅல்லது மிதிவண்டி மிதித்தலோ, யோகா போன்ற மூச்சுப் பயிற்சியையோ நாம் மேற்கொண்டால் ரத்த ஓட்டத்தை சீராக்கி இதய தசைகளை வலிமையாக வைத்திருக்க முடியும். அத்துடன் புகை பிடித்தல், நம் இதயத்தின் தம்பதிகளை வாதித்து மாரடைப்பு செய்யக்கூடிய விஷயம் அதனால் அதை நாம் செய்வதை விளக்க வேண்டும். அருந்துவதன் மூலமாகவும் இதய இயக்கம் தடைபடுவதற்கு வாய்ப்பு உள்ளதால் அதையும் கைவிட வேண்டும் தேவையற்றவை எல்லாம் மனதில் போட்டு மனதை அழுத்துவதின் மூலமாகவும் இதயத்துடிப்பு அதிகரித்து ரத்தம் அதிகரிப்பதின் மூலமாக மன அழுத்தம் உருவாகும் அவற்றை தவிர்ப்பதற்கு மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் குறைந்தபட்சம் 6 மணியிலிருந்து எட்டு மணி நேரம் உறக்கம் என்பது அவசியம். அத்துடன் இதயம் சீரான ஓட்டத்திற்கு குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு மூன்று லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தபட்சம் மருத்துவரிடம் இரண்டு- மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்றவற்றை பரிசோதித்து கொள்வது உடல் ஆரோக்கியமாக இருப்பது பற்றி நாம் தெரிந்து கொள்ள முடியும்.  நல்ல தூக்கம், தேவையற்ற உணவுகளை தவிர்த்தல், உடலுக்கு தேவையான பயிற்சியை அளித்தல், தண்ணீர் அருந்துதல், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற வழக்கத்தை வாழ்க்கையில் இருந்து அறவே அகற்றி விடுங்கள்.

 

Tags :

Share via

More stories

Logo