அன்புமணி வேண்டுமானால் தனிக்கட்சி தொடங்கட்டும்-பாமக நிறுவனர் ராமதாஸ்.
அன்புமணி தலைமைக்கு தகுதியற்றவர் என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இன்று (செப் 11) பத்திரிகையாளர்களிடையே பேசிய அவர், 'கட்சி தொடங்கியதில் இருந்து இதுவரை யாரும் ஈடுபடாத கட்சி விரோத நடவடிக்கையில் அன்புமணி ஈடுபட்டுள்ளார். பாமகவை அழிக்கும் முயற்சியில் அவர் செயல்பட்டு வருகிறார். அன்புமணியுடன் தொடர்பு வைத்துக்கொள்பவர்களும் பாமகவில் இருந்து நீக்கப்படுவார்கள்' என கட்சியினருக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட அன்புமணி, நான் வளர்த்த சில பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு தனி அணி போல செயல்படுகிறார். கடந்த 2002 முதல் எத்தனையோ பேரை அரசியல் பயிலரங்கத்தில் நாங்கள் உருவாக்கி இருக்கிறோம்" அன்புமணி வேண்டுமானால் தனிக்கட்சி தொடங்கட்டும் என கூறியுள்ளார்.
Tags : அன்புமணி வேண்டுமானால் தனிக்கட்சி தொடங்கட்டும்



















