10 வயது சிறுமி மீது கொடூர தாக்குதல்

உத்தரபிரதேசத்தில் பாக்பட் நகரில் கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அப்பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் அவரது தாயின் 2வது கணவரால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த நபர் சிறுமியை தூக்கி தரையில் வீசுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வீடியோ பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.
Tags :