7 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் பிரதமர் சந்திப்பு
ஈரான், ரஷ்யா, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெஸ்கிதான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய 7 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார் .
ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மேற் குறிப்பிட்ட 7 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் டெல்லி வருகை புரிந்து உள்ளனர்.
முன்னதாக இன்று காலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அந்த நாட்டிற்கும் மட்டும் அல்லாது அண்டை நாடுகள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுக்கும் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியதாகும் என கூறினார்
டெல்லியில் நடைபெறும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தாலிபான்களின் அரசு, இந்தியா நடத்தும் இந்தக் கூட்டம் பற்றி நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.
Tags :