37 கிலோ கஞ்சா கடத்திய 2 இளம்பெண்கள் கைது

திருவனந்தபுரம் எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் 37 கிலோ கஞ்சா கடத்திய 2 இளம்பெண்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த காதூன் பீவி (29), மாணவி சுல்தானா (21) என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ரயிலில் சந்தேகத்துக்கிடமான 2 பைகளில் கஞ்சா இருந்த நிலையில், சோதனையில் இவர்கள் சிக்கியுள்ளனர். சுற்றுலா செல்லும் பெயரில் இவர்கள் கஞ்சா கடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் பலமுறை இவர்கள் இதே செயலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
Tags :