குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி விலங்கியல்துறை சார்பில் கிராமப்புற பள்ளிக்குழந்தைகளுக்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

by Staff / 02-04-2022 12:18:41pm
குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி விலங்கியல்துறை சார்பில் கிராமப்புற பள்ளிக்குழந்தைகளுக்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி விலங்கியல்துறை சார்பில் பள்ளிக்குழந்தைகள் மற்றும் சுய உதவிக்குழுவினருக்கு தொற்றுநோய் தடுப்பு, சுகாதார மேம்பாடு, மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி கற்குடி, கட்டளைக்குடியிருப்பு கிராமப்பள்ளிகளில் நடைபெற்றது. 

செங்கோட்டை அருகே உள்ள கற்குடி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் சிவானந்தம் வரவேற்றார். குற்றாலம் பராசக்தி கல்லூரி விலங்கியல்துறை தலைவர் மாருதிகலைச்செல்வி "நமது கிரகம் நமது ஆரோக்கியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கல்லூரி மாணவிகள் பள்ளிக்குழந்தைகளுக்கு ஏழு படிநிலைகளில் கைகழுவும் முறையை செய்து காண்பித்தனர். அனைவரும் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுத்தனர்.

இதேபோல கட்டளைக்குடியிருப்பு துவக்கப்பள்ளியிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கைதட்டுவதன் அறிவியலும், முக்கியத்துவமும் குறித்து கல்லூரி மாணவிகள் விளக்கினர். ஆசிரியர் ஐயப்பன் நன்றி கூறினார்.

கிராமப்புற பெண்கள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்டுவது தொடர்பாக சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. விலங்கியல்துறை தலைவர் மாருதிகலைச்செல்வி, பேராசிரியைகள் வசந்தி, சாந்திபிரியா, பாரதி, இசக்கியம்மாள், கவிதா, கலைவாணி,ராமலட்சுமி ஆகியோர் பங்கேற்று பேசினர். விலங்கியல்துறை விரிவாக்க குழு உறுப்பினர் சாந்திபிரியா நன்றி கூறினார். சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியை இசக்கியம்மாள், ஆய்வக உதவியாளர் கண்ணன் செய்திருந்தனர்.

 

Tags :

Share via