நிர்வாணமாக கிடந்த பெண்ணின் சடலம்

by Staff / 02-01-2023 12:05:52pm
நிர்வாணமாக கிடந்த பெண்ணின் சடலம்

டெல்லியில் நேற்று இளம் பெண் ஒருவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது, குடிபோதையில் ஓட்டி வந்த கார் ஒன்று பெண்ணின் ஸ்கூட்டி மீது மோதியது. அதில் இளம்பெண்ணின் ஆடை காரின் டயரில் சிக்கி 4 கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது. இதனால் அந்த இளம்பெண் உயிரிழந்தார். இளம் பெண்ணின் நிர்வாண உடல் கண்டெடுக்கப்பட்டதும், உள்ளூர்வாசிகள் ஷகாய் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணைக்காக மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். காரில் இருந்து 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

Tags :

Share via