பெண்ணின் ஆபாச படத்தை பகிர்ந்த 2 வாலிபர்கள் கைது
எருமைப்பட்டி அருகே பெண்களின் ஆபாச படத்தை வாட்ஸ் அப் மூலம் பரப்பிய இரண்டு வாலிபர்கள் காவல் துறையினால் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே அலங்காநத்தம் பிரிவை சேர்ந்த வீரலட்சுமி என்பவரை கேலி செய்வதாக புகார் கொடுக்கப்பட்டது. மனோஜ் மற்றும் பாஸ்கர் இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமினில் வெளிவந்து வீரலட்சுமி உடன் இருந்த அந்தரங்க படத்தை நண்பர்களுக்கு அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்த நிலையில், மீண்டும் மனோஜ் மற்றும் பாஸ்கர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
Tags :



















