மணீஷ் சிசோடியா சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்

by Staff / 04-03-2023 01:29:40pm
மணீஷ் சிசோடியா சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்

டெல்லி முன்னாள் துணை முதல்வரும், நிதியமைச்சருமான மணீஷ் சிசோடியா இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய மதுபான கொள்கையில் முறைகேடு செய்ததாக மணீஷ் சிசோடியாவை கடந்த மாதம் 27ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. மணீஷ் சிசோடியா இன்று பிற்பகல் 2 மணிக்கு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் சிபிஐ காவலில் உள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவரான இவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

 

Tags :

Share via

More stories