தாய் உட்பட 3 குழந்தைகளுக்கு அரிவாள் வெட்டு இரண்டு பேர் சம்பவ இடத்திலே உயிரிழப்பு.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே 74, கிருஷ்ணபுரத்தில் அசோக்குமார் என்பவரது மனைவி தவமணி (38), மற்றும. குழந்தைகள் வித்ய தாரணி (13), அருள் பிரகாஷ் (5),அருள்குமாரி (10) மூன்று குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டிற்கு உறவினர்கள் சென்றபோது அங்கு தவமணி மற்றும் மூன்று குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் வீட்டிலிருந்துள்ளனர். மூவரும் ரத்த காயங்களுடன் வெட்டுப்பட்டு நிலையில் குழந்தைகள் அருள் பிரகாஷ், வித்ய தாரணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.தவமணி மற்றும் குழந்தை அருள்குமாரியை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : தாய் உட்பட 3 குழந்தைகளுக்கு அரிவாள் வெட்டு இரண்டு பேர் சம்பவ இடத்திலே உயிரிழப்பு.