நிர்வாணமாக நிற்க சொன்ன இளம்பெண்.. வீடியோ எடுத்த மோசடி கும்பல்

புதுவை: கூனிச்சம்பட்டு பகுதியை சேர்ந்த 21 வயது IT ஊழியருக்கு செல்போன் மூலம் இளம்பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. அந்தப் பெண் விடுதிக்கு அவரை அழைத்துள்ளார். இதையடுத்து, அறைக்குள் சென்ற அவரை நிர்வாணமாக நிற்கும்படி இளம்பெண் கூறியுள்ளார். அவரும் நிர்வாணமாக நின்ற நிலையில், ஒரு கும்பல் திடீரென்று அந்த அறையில் நுழைந்து அவரை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து, அந்த இளைஞர் அளித்த புகாரை அடுத்து 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags :