ஜெயலலிதா ஒரு இந்து தலைவர்”- அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கண்டனம்..

by Staff / 25-05-2024 01:59:36pm
ஜெயலலிதா ஒரு இந்து தலைவர்”- அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கண்டனம்..

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தி அளித்த பேட்டியில், ஜெயலலிதா ஒரு இந்து தலைவர் என குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று  கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “ஜெயலலிதாவை மதவாத தலைவர் போல் சித்தரித்து அவதூறு பரப்புவதா? ஜெயலலிதா அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர். ஜெ இந்து மதத்தைச் சேர்ந்தவர் என அண்ணாமலை பேசியதற்கு கண்டனத்திற்குரியது. அண்ணாமலை தனது சொந்த அரசியல் லாபத்திற்காக ஜெயலலிதா பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார்” என்றார்.

 

Tags :

Share via