லாரி மோதி வாலிபர் பலி

by Staff / 18-03-2023 05:31:51pm
லாரி மோதி வாலிபர் பலி

சேலம் தாதகாப்பட்டி கேட் மூணாங்கரடு அடுத்த ஒன்ப தாம் பாலி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 28). தனியார் நிறுவன ஊழியர். வேலை விஷயமாக சீலநாயக்கன்பட்டி பைபாஸ் நோக்கி தன்னுடைய ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின் னால் வந்த லாரி, ஸ்கூட்டர் மீது திடீரென மோதியதாக தெரிகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட குணசேகரன் சம் பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரி ழந்தார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 

Tags :

Share via