காங்கிரஸை அழிக்க சதி - ப.சிதம்பரம் கடும் கண்டனம்

by Staff / 29-03-2024 01:58:24pm
காங்கிரஸை அழிக்க சதி - ப.சிதம்பரம் கடும் கண்டனம்

ரூ.1823 கோடி ரூபாய் வரிபாக்கியை கட்ட சொல்லி காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “8 ஆண்டுகளாக வரியை கட்டச் சொல்லாமல் தேர்தல் நெருங்கும் வேளையில் வரியை கட்ட சொல்வது அப்பட்டமான விதி மீறல், அரசியல் கட்சிகளின் வருமானத்திற்கு வரி கிடையாது, அதுதான் இத்தனை ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தது. காங்கிரஸை அழிக்க சதி நடக்கிறது” என்று குற்றஞ்சாட்டினார்.

 

Tags :

Share via

More stories

Logo