தமிழக காவல் துறைக்கு ஓரு சல்யூட்.

by Admin / 11-11-2021 07:07:41pm
தமிழக காவல் துறைக்கு ஓரு சல்யூட்.

தமிழக காவல் துறைக்கு ஓரு சல்யூட்..சென்னை T.P.சத்திரம் காவல் துறை சட்டம் ஓழுங்கு ஆய்வாளர் திருமதி ராஜேஸ்வரி அவர்கள் தனது உயிரைப் பணயம் வைத்து சென்னையில் தொடர்ச்சியாக மழை அதிகமாக பெய்து வருகிறது காவல் துறை சார்பாக பொது மக்களுக்கு தேவையான உதவிகள் பாதுகாப்பு உள்ளிட்டவை,
காவல் துறை சார்பாக செய்து வரு‌கிறது......இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக காவல் துறை ஆய்வாளர் திருமதி ராஜேஸ்வரி அவர்கள் அந்த பகுதி பொது மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகிறார்........இன்று காலை சாலையாரம் கீழ விழுந்து  பரிதாபமாக கிடந்த ஒருவரை தன்னுடைய தோல் மீ்து தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஆட்டோவில் ஏற்றி வைத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் இவரது செயல் தமிழக காவல்துறைக்கு ஓரு எடுத்துக்காட்டாக உள்ளது.இவரை போன்ற தன்னலம் கருதாமல் பணியாற்றும் தமிழக காவல் துறைக்கும், அதிகாரிகளுக்கும் மீ்ண்டும் ஒரு சல்யூட்.

 

Tags :

Share via

More stories

Logo