சவால் நிறைந்த சூழலை முறியடிக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்.- பிரதமர் நரேந்திர மோடி
மேற்காசிய போரினால் ஏற்பட்டுள்ள சவாலான சூழ்நிலையை எதிர்கொள்ள 140 கோடி இந்தியர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மன்கி பாத் நிகழ்ச்சியின் பொழுது பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். கடந்த ஒரு மாதமாக இந்தியாவின் அண்டை நாட்டு பகுதியில் நிகழ்ந்து வரும் கடுமையான போரின் காரணமாக ஒரு இக்கட்டான சூழ்நிலை தோன்றியிருக்கின்றது. இந்த சவால் நிறைந்த சூழலை முறியடிக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் . தேவையற்ற வதந்திகளை நம்புவோ அல்லது பரப்புவோ வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறு அறிவுறுத்தியுள்ளாா்.இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்டு சிலர் அரசியலாக்க முயற்சி இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் 140 கோடி மக்களின் நலம் சார்ந்த இந்த விவகாரத்தில் சுயநல அரசியலுக்கு இடம் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார் .மேற்கு ஆசிய பிராந்தியம் இந்தியாவின் எரிசக்தி தேவைகளுக்கு மிக முக்கியமான மையமாகும் இந்த போரினால் உலக அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார் இந்த நெருக்கடியான நேரத்தில் அங்கு வசிக்கும் சுமார் ஒரு கோடி இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வரும் வளைகுடா நாடுகளுக்கு பிரதமர் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் கடந்த காலகட்டங்களில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளை இந்திய மக்கள் தங்களது கூட்டு வலிமையால் முறியடித்தது போலவே தற்போதைய சூழலையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
Tags :



















