அசாமில் பா.ஜ.க மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தால் .... பலதார மணம் தடை செய்யப்படும்-உள்துறை அமைச்சர் அமித்ஷா

by Admin / 30-03-2026 08:33:24am
 அசாமில்  பா.ஜ.க மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தால் .... பலதார மணம் தடை செய்யப்படும்-உள்துறை அமைச்சர் அமித்ஷா

அசாம் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நல் பாரி மற்றும் சோனித் பூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அசாமில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தால் வரும் நாட்களில் அங்கு பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பலதார மணம் தடை செய்யப்படும் என்றும் குறிப்பிட்டதோடு கடந்த 10 ஆண்டுகளில் அசாமில் ஊடுருவல் பெருவளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது மட்டும் போதாது என்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு ஊடுருவல் காரர்களையும் கண்டறிந்து வெளியேற்றவும் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் கோரிக்கை விடுத்தார் கொல்கத்தாவில் நடந்த நிகழ்வு ஒன்றிலும் பேசியவர் அசாமில் ஊடுருவல் தடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஊடுருவக்கார்களுக்கு முக்கிய வழிப்பாதையாக மேற்குவங்கம் மாறி உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

 

Tags :

Share via

More stories