ஹால்மார்க் யுனிக் ஐடென்டிஃபிகேஷன் (HUID) எண் என்பது......

by Admin / 31-03-2023 10:43:18pm
ஹால்மார்க் யுனிக் ஐடென்டிஃபிகேஷன் (HUID) எண் என்பது......

 தங்கத்திலான நகைகள் மற்றும் பொருள்களுக்கு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து பி ஐ எஸ் எனும் இந்திய தர நிர்ணயக் கழகத்தின் ஆறு இலக்க ஹால்மார்க் குறியீட்டு எண் கட்டாயமாக பின்பற்றப்படும் இது குறித்து, பி எஸ் ஐ தலைவர் பிரமோத் குமார் திவாரி செய்தியாளர்களிடம் கூறியது. ஏப்ரல் தேதியில் இருந்து ஹால்மார்க் ஆறு இலக்க குறியீடு இன்றி தங்க நகைகள் மற்றும் பொருள்களை விற்பனை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடுவும் நீட்டிக்கப்படாமல் ஏப்ரலில் இருந்து தொடர்வதாகவும் எளிதாக தொழில் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் பி எஸ் ஐ தர நிலைகளை உருவாக்கி வருகிறது. ஏப்ரல் முதல் தேதியில் இருந்து ஹால் மார்க்கின் ஆறு இலக்க குறியீடு இன்றி தங்கப் பொருள்கள் விற்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.  . வளர்ந்து வரும் தொழில் நுட்பமான பிளாக் செயின் தொழில் நுட்பத்திற்கு ஈடாக பி எஸ் ஐ தனது தர நிலையை அமைத்துள்ளது. பழைய நகை இருப்புகளை விற்று தீர்ப்பதற்காக நகை உற்பத்தியாளர்களுக்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டு விட்டது. இப்போது, மேலும் அவகாசம் அளிக்கப்படாது. நகை கடைக்காரர்கள் ஆலோசனைக்கு பின் தங்க நகைகள் மற்றும் கலை பொருள்களின் எடையையும் கால்மார்க்கின் ஒரு பகுதியாக சேர்க்கமுடிவு செய்துள்ளது. லேசர் இயந்திரங்களின் வாயிலாக குறிக்கப்படும் இந்த ஆறு இலக்க குறியீடு நுகர்வோரின் நகங்களை பாதுகாப்பதற்காகவும் மக்கள் ஏமாற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவும் வழங்கப்படுவதாகும். இதற்காக நாட்டில் 1400 ஹால்மார்க் மையங்கள் உள்ளன என்று அவர் தெரிவித்தார்

ஏப்ரல் 1 முதல் ஹெச் யு ஐ டி ஆறு இலக்க ஹால்மார்க் அடையாள எண்கள்: நகைகளை மட்டுமே விற்க அனுமதி இதற்கு முன் நகைகளின் மீது ஹால்மார்க் நகை செய்த நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும் இந்தியா முழுவதும் 288 மாவட்டங்களிலும் தமிழகத்தில் 26 மாவட்டங்களிலும் ஹெச் யு ஐ டி என் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

பி ஐ எஸ் கேர் ஆப் மூலம் ஹெச் யு ஐ டி ஐ பயன்படுத்தி தங்கத்தின் தரம் ஹால்மார்க் முத்திரை பெறப்பட்ட தேதி உள்ளிட்ட தகவல்களை அறியலாம்.. அடையாள எண் இல்லாமல் தங்க நகைகளை விற்றால் நகையின் மதிப்பை விட ஐந்து மடங்கு அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை விதிப்பதாக இந்திய தர நிர்ணய ஆணையும் தகவல் தெரிவித்துள்ளது.

ஹால்மார்க் யுனிக் ஐடென்டிஃபிகேஷன் (HUID) எண் என்பது எண்கள் மற்றும் எழுத்துக்களைக் கொண்ட ஒரு தனித்துவமான 6 இலக்க எண்ணெழுத்து குறியீடாகும். இது அசேயிங் & ஹால்மார்க்கிங் மையங்களில் ஒரு நகையின் மீது கைமுறையாக முத்திரையிடப்பட்டுள்ளது
ஹால்மார்க் யுனிக் ஐடென்டிஃபிகேஷன் (HUID) எண் என்பது......
 

Tags :

Share via