முதல் தொகுதி விற்பனைக்கு தயார்  கொரோனாவுக்கு புதிய  மருந்து - விலை ரூ.59,750

by Editor / 24-05-2021 07:47:13pm
முதல் தொகுதி விற்பனைக்கு தயார்  கொரோனாவுக்கு புதிய  மருந்து - விலை ரூ.59,750

 


கொரோனா நோயாளிகளுக்காக புதிய மருந்தினை அறிமுகப்படுத்தி இருக்கிறது ரோச்சின் நிறுவனம். இந்நிறுவனம் சிப்லா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் இந்த ரோச்சின் ஆன்டிபாடி காக்டெய்ல் மருந்தினை அறிமுகப்படுகிறது.
ரோச் இந்தியா மற்றும் சிப்லா இணைந்து  இந்த மருந்தினை அறிவித்துள்ளன. ஆன்டிபாடி காக்டெயிலின் முதல் தொகுதி இந்தியாவில் இப்போது கிடைக்கிறது. ஜூன் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து இரண்டாவது தொகுதி கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளன.
ஒரு நோயாளிக்கு வழங்கப்பட வேண்டிய 1,200 மில்லி கிராம் மருந்து அனைத்து வரிகளும் உள்பட 59,750 ரூபாய் என்று ரோ&சிப்லா கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் அவர்களின் மோசமடைவதற்கு முன்பாக அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் இந்த ஆன்டிபாடி காக்டெய்ல் மருந்து முக்கிய பங்கு வகிக்கும் என்கிறார் ரோச் பார்மா தலைமை அதிகாரி வி.சிம்ப்சன் இமானுவேல். அவர் மேலும், இந்தியாவில்கொரோனாவால் சுகாதாரத்துறையின் சுமையை குறைக்கவும், மருத்துவமனைகள் ஹவுஸ் புல் ஆவதையும் குறைக்கும் இந்த ஆன்டிபாடி காக்டெய்ல் மருந்து என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via