முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

by Staff / 03-08-2023 12:31:08pm
முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நங்கநல்லூர் எம்ஜிஆர் சாலையில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளை இன்று ஆய்வு செய்தார். மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். ரூ.67.67 கோடி மதிப்பீட்டில் 12,862 மீட்டர் நீளத்திற்கு இந்த பணிகள் நடைபெறுகிறது. 7,149 மீட்டர் பணிகள் நிறைவடைந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். நங்கநல்லூர் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த பிறகு பழவந்தாங்கல் காவல் நிலையம் சென்று முதல்வர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். காவல் நிலையத்தில் கோப்புகளை ஆய்வு செய்த முதல்வர் போலீசாருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

 

Tags :

Share via