உலக பட்டினி குறியீடு: பின்தங்கிய இந்தியா

by Staff / 15-10-2022 03:10:44pm
உலக பட்டினி குறியீடு: பின்தங்கிய இந்தியா

அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே என்ற நிறுவனமும் உலக அளவில் பட்டினி மற்றும் ஊட்டசத்து குறைபாடு ஆகியவற்றை ஆய்வு செய்து பட்டினிக் குறியீடு பட்டியலை வெளியிட்டுள்ளது. 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் இந்தியா 107-வது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டில் 101-வது இடத்தில் இந்தியா இருந்தது. அண்டை நாடுகளான வங்காளதேசம், பாகிஸ்தான், நேபாளத்தை விட இந்தியா இந்தப் பட்டியலில் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சீனா, துருக்கி, குவைத் உள்ளிட்ட 17 நாடுகள் இந்தப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.

 

Tags :

Share via