புதிய உச்சம் பாதிப்பு 3 கோடியே 85 லட்சத்து 66 ஆயிரத்து 27 ஆக உயர்ந்தது.

by Admin / 21-01-2022 12:28:05pm
 புதிய உச்சம் பாதிப்பு 3 கோடியே 85 லட்சத்து 66 ஆயிரத்து 27 ஆக உயர்ந்தது.

கேரளாவில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் 46,369 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 3-வது அலையால் தினசரி பாதிப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.
கடந்த மாதம் 27-ந்தேதி நிலவரப்படி 6,358 ஆக இருந்த பாதிப்பு கடுமையாக உயர்ந்து 7-ந்தேதி 1 லட்சத்தை கடந்தது.

தொடர்ந்து அதிவேகத்தில் பரவிய 3-வது அலையால் தினசரி பாதிப்பு 12-ந்தேதி 2 லட்சத்தையும், நேற்று முன்தினம் 3 லட்சத்தையும் தாண்டியது. இந்நிலையில், நேற்றைய பாதிப்பு 3½ லட்சத்தை நெருங்கி உள்ளது.

இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,47,254 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 85 லட்சத்து 66 ஆயிரத்து 27 ஆக உயர்ந்தது.

நாடு முழுவதும் நேற்று முன்தினம் 19.35 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் தினசரி பாதிப்பு விகிதம் 16.41 சதவீதத்தில் இருந்து 17.94 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வாராந்திர பாதிப்பு விகிதமும் 16.06-ல் இருந்து 16.56 சதவீதம் ஆக அதிகரித்தது.

நேற்று அதிகபட்சமாக கர்நாடகாவில் 47,754 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு நேற்று முன்தினம் பாதிப்பு 40,499 ஆக இருந்த நிலையில், நேற்றைய பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி உள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 30,540 பேர் அடங்குவர்.

கேரளாவில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் 46,369 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று 1 லட்சத்து 15 ஆயிரத்து 357 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் கேரளாவில் தொற்று பாதிப்பு விகிதம் 40 சதவீதத்தை கடந்து அதிர்ச்சி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்பட கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவில் புதிதாக 45,932 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மும்பையில் மட்டும் 5,208 பேர் அடங்குவர்.

தமிழ்நாட்டில் 28,561, குஜராத்தில் 24,485, உத்தரபிரதேசத்தில் 18,429, ராஜஸ்தானில் 14,079, ஆந்திராவில் 12,615, டெல்லியில் 12,306, மேற்குவங்கத்தில் 10,959, ஒடிசாவில் 10,368 பேருக்கு தொற்று உறுதியானது.

கொரோனா பாதிப்பால் மேலும் 703 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் 309 உள்பட 341 பேர் அடங்குவர்.

இதுதவிர டெல்லியில் 43, தமிழ்நாட்டில் 39, மகாராஷ்டிராவில் 37, மேற்கு வங்கத்தில் 37, பஞ்சாபில் 36, கர்நாடகாவில் 29 பேர் நேற்று இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,88,396 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2,51,777 பேர் மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 60 லட்சத்து 58 ஆயிரத்து 806 ஆக உயர்ந்தது.

இன்றைய நிலவரப்படி, 20,18,825 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த எண்ணிக்கை நேற்று முன்தினத்தைவிட 94,774 அதிகம் ஆகும்.

கடந்த 1-ந்தேதி நிலவரப்படி நாடு முழுவதும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1.04 லட்சமாக இருந்தது. அடுத்த 20 நாட்களில் இந்த எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளது.

நாட்டில் அதிகபட்சமாக கர்நாடகாவில் 2.93 லட்சம், மகாராஷ்டிராவில் 2.62 லட்சம் பேரும், கேரளாவில் 1.99 லட்சம், தமிழ்நாட்டில் 1.44 லட்சம், குஜராத்தில் 1.04 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, இதுவரை 71.15 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 19,35,912 மாதிரிகள் அடங்கும்.

 

Tags :

Share via