விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை.. அதிரடி உத்தரவு
அமெரிக்காவில், கொலை குற்றவாளிக்கு அந்நாட்டு சட்டப்படி விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஒக்கலஹாமா மாகாணத்தைச் சேர்ந்தவர் டெனால்டு கிரான்ட். 25 வயது இளைஞரான இவர், கடந்த 2001 ம் ஆண்டு ஏற்பட்ட மோதல் ஒன்றில், இரண்டு பேரை கொலை செய்தார்.
அவர் மீதான வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 2005-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை குறைக்க கோரி பல முறை மனுக்கள் தாக்கல் செய்தும் தள்ளுபடியானது.
இதையடுத்து அமெரிக்க சட்டப்படி குற்றவாளி டெனால்டு கிரான்ட்டிற்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதன் மூலம் அமெரிக்காவில் இந்தாண்டில் முதல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
Tags :