போலீசார் ஆய்வு பாலியல் தொழில்: இருவர் கைது.

by Staff / 04-12-2023 04:40:58pm
போலீசார் ஆய்வு  பாலியல் தொழில்: இருவர் கைது.

மயிலாப்பூர், காரணீஸ்வரர் பக்கோடா தெருவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடப்பதாக, விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்குச் சென்று போலீசார் ஆய்வு செய்த போது, ராயப்பேட்டையைச் சேர்ந்த சாந்தி, 50, என்பவர், பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிந்தது.தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் சிக்கியிருந்த பெண் ஒருவரை மீட்டு, அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.மேலும், மயிலாப்பூர், சிவசாமி சாலையிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடத்தி வந்த டேவிட் ஜெயக்குமார், 36, மஞ்சுளா, 34, ஆகிய இருவரை, மயிலாப்பூர் போலீசார் கைது செய்து, இரு பெண்களை மீட்டனர்.அதேபோல், வளசரவாக்கம் கைக்கான்குப்பம் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடத்தி வந்த, இந்திரா வெங்கடேஷ் ஆகிய இருவரை கைது செய்து, இரண்டு பெண்களை மீட்டனர்.

 

Tags :

Share via

More stories