அ.தி.மு.க- பா.ஜ.க தொண்டர்களுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்-தமிழிசை சௌந்தர்ராஜன் கைது
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர் அவர் தன்னுடைய காதலனுடன் இரவு 8 மணி அளவில் பேசிக்கொண்டிருந்த பொழுது இருவர் வந்து மிரட்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி புகார் அளித்ததை தொடர்ந்து அந்தப் பகுதியில் பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. இந்நிலையில் ,கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் முன்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் அனுமதி பெறாமல் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் செய்தனர் .இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டிருந்தார். முறைப்படியான அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் செய்ததால்முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.. இதேபோன்று வள்ளுவர் கோட்டத்தின் முன்பாக பாரதிய ஜனதா கட்சி முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், பா.ஜ.க தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா். காவல்துறையினர் அவர்களையும் கைது செய்தனர்.
Tags :