சட்ட விரோதமாக வயலில் வைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி விவசாயி பலி.
தென்காசி மாவட்டத்திலுள்ள பல்வேறுபகுதிகளில் கோடைகாலமென்பதால் உணவுத்தேடி குன்றுகள்,வனப்பகுதிகளிலிருந்தும் ஏராளமான வன உயிரினங்கள் ஊருக்குள் பகுந்துவருகின்றன.மேலும் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதபப்டுத்தியும் வருகின்றன.இதனைத்தொடர்ந்து ஏராளமான பகுதிகளில் விவசாயிகள் முறையான அனுமதிவாங்காமல் தனங்களது நிலங்களில் மின்சாரவேலிகளை வைத்துள்ளனர்.இன்தமின்சாரவெளிகளில் வனவிலங்குகள் சிக்கி உயிரிழப்பதைவிட மனிதர்கள் சிக்கி உயிரிழப்பது அதிகரித்துவருகிறது.இந்தநிலையில் ஆலங்குளம் அருகே, அருணாச்சலபேரி கிராமத்தில் மான், காட்டுப்பன்றி போன்ற வன விலங்குகள் வராமல் தடுக்க சட்ட விரோதமாக வயலில் வைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி முத்துராஜ் (40) என்ற விவசாயி பலி பலியானார்.இவரது உடலை கைப்பற்றி ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து போலீசார் விசாரணைநடத்திவருகின்றனர்.
Tags :