புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல்: இன்று மதியம் 12 மணிக்கு அறிவிப்பு

by Editor / 22-09-2021 09:08:21am
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல்: இன்று மதியம் 12 மணிக்கு அறிவிப்பு

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று மதியம் 12 மணிக்கு தலைமை செயலகத்தில் அறிவிக்கப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை இருமுறை மட்டுமே உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. 2006ஆம் ஆண்டுக்கு பின் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அக்டோபருக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதால் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது. 1,149 பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் தேதியை இன்று மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் அறிவிக்கிறார்.

 

Tags :

Share via

More stories

Logo