மதுரை சரக காவல்துறை டிஐஜியாக ரம்யாபாரதிபொறுப்பேற்றுக்கொண்டார்.

by Editor / 16-08-2023 06:19:18pm
மதுரை சரக காவல்துறை டிஐஜியாக ரம்யாபாரதிபொறுப்பேற்றுக்கொண்டார்.

 

மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட காவல்துறையை உள்ளடக்கிய மதுரை சரக காவல்துறை துணைத்தலைவராக ( டிஐஜியாக) ரம்யாபாரதி, மதுரை மாநகர் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள டிஐஜி அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரம்யா பாரதி: "பழமையான தொன்மையான மாவட்டமான மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தை மேற்பார்வை பணியில் டிஐஜியாக பொறுப்பேற்றுள்ளதாகவும் 
சட்ட ஒழுங்கு பராமரிப்பை பாதுகாக்க புகார்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். தென் மண்டலத்தில் போதை பொருட்களுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகள், சொத்துக்கள் பறிமுதல் போன்ற பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அந்த நடவடிக்கைகள் தொடரும்.என்றும் ஜாதியை மோதல்கள் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். ஜாதிய மோதல் தொடர்பான புகார் வந்தால் உடனுக்குடன் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும், சட்ட ஒழுங்கை பாதுகாப்பது தலையாயக் கடமை என்பதை நிலை நிறுத்துவோம். தமிழக அரசு எந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதோ அதனை முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுப்போம் என்றார்.
 

 

Tags :

Share via