650 பேரை பலி வாங்கிய நிலச்சரிவு

by Staff / 26-05-2024 03:39:08pm
650 பேரை பலி வாங்கிய நிலச்சரிவு

தென் மேற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இங்கு உள்ள எங்கா மாகாணம், காகலம் மலை கிராமத்தில் நேற்று முன்தினம் நிலச்சரிவு ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால், பாறைகளும், மரங்களும் குடியிருப்புகள் மீது விழுந்தன. அதில் 1200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. கிராமத்திற்கு செல்லும் சாலையும் பாதிக்கப்பட்டதால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, ஐ.நா., அதிகாரி ஒருவர், நிலச்சரிவில் 150 வீடுகள் மண்ணில் புதைந்த நிலையில் பலியானோரின் எண்ணிக்கை 670 ஐ தாண்டியதாக கூறியுள்ளார். இந்த பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via