ரியல்மியின் முதல் லேப்டாப்

by Editor / 18-08-2021 06:07:20pm
ரியல்மியின் முதல் லேப்டாப்

 

ரியல்மி நிறுவனத்தின் முதல் லேப்டாப்பான, 'ரியல்மி புக் ஸ்லிம்' இந்தியாவில் அறிமுக மாகி இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் 'ரியல்மி புக் ஸ்லிம்' என்ற லேப்டாப்பை உருவாக்கியுள்ளது. 2கே
டிஸ்பிளேக்களுடன் வரும், சில லேப்டாப்-களில் இதுவும் ஒன்று. வழக்கமான முழு
ஹெச்.டி லேப்டாப்களை விட இரண்டு மடங்கு பிக்சல்களை கொண்டது இது.

14.4 மில்லி மீட்டர் மெல்லியதாக உள்ள இந்த லேட்பாட், மேக்புக் ஏரை (MacBook Air) விட ஒல்லியாகவும் 1.38 கிலோ எடை கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
சீனா மற்றும் ஐரோப்பாவில் ரியல்மி புக் (Realme Book) என அழைக்கப்படும் இந்த
லேப்டாப், இந்தியாவில் ரியல்மி புக் ஸ்லிம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கான
காரணத்தை அந்த நிறுவனம் தெரிவிக்கவில்லை.11 வது ஜெனரேசன் இன்டெல்கோர் i3 பிராசஸர் மற்றும் i5 பிராசஸர்களில்
வெளியாகியுள்ள இந்த லேப்டாப், இரண்டு வகை விலைகளில் கிடைக்கும். i3 பிராசஸரை
கொண்ட லேப்டாப் 46,999 ரூபாய்க்கும் அறிமுக விலையாக 44,999 ரூபாய்க்கும் கிடைக்கும்.
i5 பிராசஸர் லேப்டாப் 59,999 ரூபாய்க்கும் அறிமுக விலையாக 56,999 ரூபாய்க்கும்
கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிமுக சலுகை சில நாட்களுக்கு மட்டுமே
இருக்குமாம்.

முதல் விற்பனை, ஆகஸ்ட் 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட், Realme.com
மற்றும் பிற ரீடெயில் கடைகள் கிடைக்கும். புதிய ரியல்மி புக் ஸ்லிம், கிரே மற்றும்
ப்ளூ கலர்களில் வருகிறது.

மெட்டல் பாடி டிசைன், 14 இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே, 2K (2160 × 1440) ரெசல்யூஷன்,
400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 11 வது ஜெனரேசன் இன்டெல் கோர் i5-1135G7 பிராசஸர்,
8GB LPDDR4x RAM மற்றும் 512GB PCIe SSD ஸ்டோரேஜ், 3.5 மிமீ ஹெட்போன் ஜாக்,
வைஃபை 6, ஒரு முறை சார்ஜ் செய்தால் 8.5 மணிநேர பேட்டரி ஆயுள், 54W பேட்டரி, 65W
சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பம், 30 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்யும் திறன்,
வெறும் 1.38 கிலோ எடை, விண்டோஸ் 10, விண்டோஸ் 11-ஐ எளிதாக
மேம்படுத்திக் கொள்ளும் வசதி, பிசி கனெக்ட் வசதிகளுடன் வருகிறது இந்திய ரியல்மி புக் ஸ்லிம் லேப்டாப்.

 

Tags :

Share via