நாகப்பட்டினத்தில் நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி ஒருவர் உயிரிழப்பு

by Staff / 14-06-2022 12:20:00pm
நாகப்பட்டினத்தில் நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி ஒருவர் உயிரிழப்பு

நாகை அரசு மருத்துவமனையில் 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெண் ஒருவர் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சிவசுப்பிரமணியன் என்பவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  நாகப்பட்டின மாவட்டம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த சிவசுப்பிரமணி  வெள்ளிக்கிழமை உடல்நலக் கோளாறு ஏற்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நான்கு நாட்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து வெளிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories