எம்எல்ஏ ஜவாஹிருல்லாவின் கோரிக்கை - முதலமைச்சர் உறுதி

by Staff / 15-02-2024 02:17:06pm
எம்எல்ஏ ஜவாஹிருல்லாவின் கோரிக்கை - முதலமைச்சர் உறுதி

இட ஒதுக்கீடு வழங்கும் கோரிக்கை ஆவன செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அவர், மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், பாபநாசம் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லாவின் கோரிக்கை மீது பதிலளித்தார். அப்போது, 'ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சீர்மரபினர் சமூகத்தை சார்ந்த மக்கள் இஸ்லாத்தை தழுவினால் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கும் ஜவாஹிருல்லாவின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து ஆவன செய்யப்படும்' என உறுதி அளித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo