இடைத்தேர்தலில் தேமுதிக வெற்றி பெறும்: பிரேமலதா நம்பிக்கை

by Staff / 13-02-2023 12:39:36pm
இடைத்தேர்தலில் தேமுதிக வெற்றி பெறும்: பிரேமலதா நம்பிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக நிச்சயம் வெற்றி பெறும் என்று கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், கட்சியின் கொடி நாள் விழா கொண்டாடப்பட்டது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சிக் கொடியேற்றி வைத்து, நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் பேசிய அவர், ஈரோடு தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும். மற்ற கூட்டணிகளில் நிறைய குழப்பங்கள் இருந்ததால், நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம் என்று கூறினார்.

 

Tags :

Share via

More stories